Connect with us

இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு – டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

Featured

இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு – டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற அபாரமாக ஆடிய டெல்லி அணி குஜராத் அணியை வீழ்த்தி வசதியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் DC – GT அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார் .இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் பிரஷர் களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து ஷாய் ஹோப் வந்த வேகத்தில் வெளியேற அக்சர் படேலுடன் கேப்டன் ரிஷப் பண்ட் கைகோர்த்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் பந்துகளை சிதறடித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர் . இதில் 43 பந்துகளில் 66 ரன்களை எடுத்த அக்சர் கேட்ச் கொடுத்து வெளியேற ரிஷப் தனது அதிரடியை இறுதி வரை தொடர்ந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 224 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கில் வெறும் 6 ரன்களில் வெளியேற . பின்னர் வந்த மற்றொரு தொடக்க வீரரான சாஹாவும் 39 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஓமர்சாய் 1 ரன் எடுத்து வந்த வழியில் செல்ல .

அதிரடியாக விளையாடி வந்த தமிழக வீரரான சாய் சுதர்சன் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் தெவாட்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற . அதிரடியாக ஆடி வந்த டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை பட்ட நிலையில் . ஸ்ட்ரைக்கில் இருந்த ரஷித் கான் முடித்த வரை போராடியும் இலக்கை முடியவில்லை .

See also  டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 220 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் 4 ரன்களில் டெல்லி அணி அசைத்தல் வெற்றி பெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top