Connect with us

பிவி நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் எம்எஸ் சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

Bharat_Ratna

General News

பிவி நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் எம்எஸ் சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு சமீபத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்த நிலையில், தற்போது மேலும் மூன்று நபர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “நமது முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குப் பணிபுரிந்தார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் சமமாக நினைவுகூரப்படுபவர். அவரது தொலைநோக்கு தலைமையானது இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேறி, நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றியது.” என்று தெரிவித்துள்ளார்.

சரண் சிங் குறித்து கூறுகையில், “நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார். எமர்ஜென்சிக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கான அவரது அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஊக்கமளிக்கிறது.” என்று மோடி தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து கூறுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

See also  அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்திடுக - தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கோரிக்கை..!!

ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராகவும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in General News

To Top