Connect with us

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் – முதல்வர் ஸ்டாலின்

Featured

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் – முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஐந்தர்மந்தரில் மத்திய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :

நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள் ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார்.

மாநிலங்கள் இருப்பதோ மாநிலங்களுக்கு முதலமைச்சர்கள் இருப்பதோ பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிடிக்கவில்லை . இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி.

பிரதமர் ஆன பிறகு செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையைப் பறித்ததுதான் . நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார்

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம். அதைத்தான் பாஜக அரசு சீரும் சிறப்புமாக செய்து வருகிறது

இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜக முதலமைச்சர்கள் நினைக்க வேண்டாம் . நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாவே சொல்ல விரும்புகிறேன்.

பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைகளுக்கு யார் தான் சுமூக தீர்வை கொண்டுவர போகிறார்கள் நமது நாடு அணைத்து வகையிலும் வளர்ச்சி கண்டு எப்போது தான் வல்லரசு நாடாக மாறப்போகிறது என்று தெரியவில்லை . நிச்சயம் ஒரு நாள் மாறும் என்ற நம்பகியில் பயணிப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Featured

To Top