Connect with us

“நடிகர் பிரித்விராஜின் ‘The Goat Life’ பட ரிலீஸ் Poster! Viral!”

Cinema News

“நடிகர் பிரித்விராஜின் ‘The Goat Life’ பட ரிலீஸ் Poster! Viral!”

நடிகர் பிரித்விராஜ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்திலிருந்தே மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார். தமிழில் மொழி உள்ளிட்ட படங்களில் இவரது அற்புதமான நடிப்பு தற்போதும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை கடத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார்.

இவரது கதைத்தேர்வு பிரமிக்க வைக்கிறது. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி ரசிகர்களை சிறப்பாக உணர வைத்து வருகிறார் பிரித்விராஜ். சமீபத்தில் இவரது நடிப்பில் சலார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் பிரபாசுக்கு இணையான கேரக்டரில் பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தாக பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் லைஃப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சர்வைவல் அட்வென்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரித்விராஜுடன் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கேஆர் கோகுல் மற்றும் அரபு நடிகர்கள் தலிப் அல் பலுஷி, ரிக்காபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு இசை மற்றும் ஒலி வடிமைப்பை இசைப்புயல் AR ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து AR ரஹ்மான் தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையை சொல்லும் படம் தி கோட் லைஃப் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதையடுத்து அதன் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான ஆடுஜீவிதம் நாவலை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உள்பட 12 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாவலை படமாக்குவது தனக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்ததாக இயக்குநர் பிளெஸ்ஸி முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். அந்த முயற்சியில் அவர் வெற்றியடைந்திருப்பார் என்று நம்பலாம்.

See also  திரையரங்குகளை விட்டு OTTக்கு வரும் விஜய்யின் தி கோட் திரைப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top