Connect with us

“ப்ளூ ஸ்டார் படம் பார்த்து அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு” – நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி..!!

Cinema News

“ப்ளூ ஸ்டார் படம் பார்த்து அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு” – நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி..!!

ப்ளூ ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ப்ரித்வி பாண்டியராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.

ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படமா நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

“ப்ளூ ஸ்டார் படம் பாத்துவிட்டு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்போது அப்பாவின் முகத்தில் சந்தோஷம் தெரிகிறது.

இதற்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் என் அப்பாவின் முகத்தை பார்ப்பதற்கே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த அப்பாவும் தனது மகனுக்காக யோசிப்பதைப்போல அவரும் எனக்கு நல்ல வாய்ப்பு வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்”

இந்த படம் எனது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக மாறியுள்ளது என்னையும் மாற்றியுள்ளது என நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top