Connect with us

“இந்த வாரம் Small House வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்கள், இதனால்தான் சென்றார்களா?!”

Bigg Boss Tamil Season 7

“இந்த வாரம் Small House வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்கள், இதனால்தான் சென்றார்களா?!”

இந்த வார கேப்டனாக மாயா தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் 6 போட்டியாளர்களை தேர்வு செய்து ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இரண்டு நபர்கள் ரூல்ஸ் பிரேக் பண்ண தயங்க மாட்டாங்க, இரண்டு நபர்கள் ரூல்ஸ் பிரேக்கிங்கில் ஒருத்தர் பண்ணா, நானும் அதையே செய்றேன்னு போறவங்க, இவ்வளவு நாள் நீங்க எதுவும் பண்ணல, இனிமேலாவது ஏதாவது செய்யுங்கள் என மூன்று காரணங்களை பிக் பாஸ் கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று காரணங்களில் ஒவ்வொரு காரணத்திற்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்து ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இரண்டு நபர்கள் ரூல்ஸ் பிரேக் பண்ண தயங்க மாட்டாங்க என்ற காரணத்திற்காக கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஸ்மால் ஹவுஸ் செல்வார் என கேப்டன் மாயா அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரூல்ஸ் பிரேக்கிங்கில் ஒருத்தர் பண்ணா நானும் அதையே செய்றேன்னு போறவங்க என்ற காரணத்திற்காக ரவீனா மற்றும் மணிச்சந்திரா ஆகியோர்களை மாயா தேர்வு செய்தார். இதனை அடுத்து இவ்வளவு நாள் நீங்க எதுவும் பண்ணல, இனிமேலாவது ஏதாவது செய்யுங்க என்ற காரணத்திற்காக தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியவர்களை மாயா தேர்வு செய்தார்.

மேற்கண்ட ஆறு நபர்களும் இந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மூன்று காரணத்திற்கும் பொருத்தமானவர் பூர்ணிமா என்றும் ஆனால் அவரை காப்பாற்றி விட்டு பக்கா பிளானோடு மாயா மேற்கண்ட ஆறு பேரை ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் விசில் அடிக்க வைத்தாரா விஜய்..? கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top