Connect with us

இன்னும் 4 நாள் தான் இருக்கு இவ்ளோ வன்மம் எதுக்கு – பிக் பாஸ் வீட்டில் எக்கோ அடிக்கும் மாயாவின் புலம்பல்

Bigg Boss Tamil Season 7

இன்னும் 4 நாள் தான் இருக்கு இவ்ளோ வன்மம் எதுக்கு – பிக் பாஸ் வீட்டில் எக்கோ அடிக்கும் மாயாவின் புலம்பல்

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் மாயா மற்றும் அர்ச்சனாவின் புலம்பல் சத்தம் பிக் பாஸ் வீடு முழுவதும் எதிரொலிக்கிறது .

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையிலும் போட்டியாளர்களுக்கு இடையில் வரும் சண்டை மட்டும் குறைந்தபாடு இல்லை . அதற்கேற்ப இனறைய ப்ரோமோக்களும் அமைந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் போட்டியாளர்களுக்குள் இன்றும் சில சலசலப்புகள் நிகழ்ந்துள்ளது .

பிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்பட்டது போல் இருக்கும் மாயா மற்றும் அர்ச்சனா இருவரும் பாவமாக பேசுகின்றனர் அதில் என் மனதில் இவங்க எல்லாத்தையும் வேற ஒரு இடத்தில வைத்திருக்கிறேன் ஆனால் இவங்க என்ன ஹுர்ட் பண்றங்க என அர்ச்சனா புலம்புகிறார்.

அதேபோல் இந்த பக்கம் இன்னும் 4 நாள் தான் இருக்கு இவ்ளோ வன்மம் எதுக்கு என்று மாயா ஒரு புறம் புலம்ப இவர்களின் புலம்பல் சத்தம் பிக் பாஸ் வீடு முழுவதும் எதிரொலிக்கிறது.

இந்த சீசனின் மூத்த போட்டியாளரான விசித்ரா நேற்று இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மீதம் இருக்கும் போட்டியாளர்களுக்குள் தற்போது சண்டை சச்சரவுகள் நிலவி வருவதல்ல இதில் யார் எந்த டைட்டிலை தட்டிச்செல்ல போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top