Connect with us

“பிரதீபுக்கு நடந்தது துரோகம் தான்…அதை நான் ஆணித்தரமாக சொல்வேன்!”

Bigg Boss Tamil Season 7

“பிரதீபுக்கு நடந்தது துரோகம் தான்…அதை நான் ஆணித்தரமாக சொல்வேன்!”

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகிறது…அனைவருமே இதனை ரசித்தும் வருகின்றனர்..பலர் விமர்சனத்தை சொல்லியும் வருகின்றனர்…

இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிககமாக செல்வாக்கு உள்ள போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார்…அவருக்கு எல்லாவகை விமர்சனமும் வந்தது அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தான் தற்போது விவாதமாக மாறியது…

சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள சினேகன் இந்த நிகழ்ச்சியை நான் 24 மணி நேரமும் பார்த்தது இல்லை…இதனால் எனக்கு யார் செய்தது சரி,யார் செய்தது தவறு என்று எனக்கு தெரியாது.

அதே போல அவர் தவறாக பேசிவிட்டார் என்ற குற்றமும் இருக்கின்றது…இதற்கு வாய்ப்பு இருக்கு ஏன் என்றால் ஒரு விளையாட்டில் ஒரு மனிதன் வார்த்தை தடுமாறுவது இயல்பான ஒன்று தான்…அதில் எந்த விதமான தயக்கமும் இல்லை…ஆனால் பிரதீப் திட்டமிட்டு பேசினார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..

பிரதீப் விளையாடி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன் அவர் யார் திட்டினாலும் அதை எதார்த்தமாக கடந்து போகக்கூடிய மனிதர்.ஆனால் அனைவரும் சேர்த்து அவரை தனித்து ஒதுக்கியதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்….அவரை ஒதுக்கியது மட்டுமில்லாமல் ரெட் கார்டு கொடுத்து அனுப்பியது சரியானது கிடையாது அது குற்றமாகும்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top