Connect with us

New Entry – அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்

New Entry

Bigg Boss Tamil Season 7

New Entry – அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது புதிய இரு நபர்கள் ( New Entry ) உள்ளே வருவதுபோல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டியில் உள்ள பணம் 16 லட்சமாக மாறி இருந்தது .

இதனை கண்ட பூர்ணிமா வேகமாக ஓடி வந்து நான் அந்த பணப்பெட்டியை எடுக்க போகிறேன் என தெரிவித்து அந்த பெட்டியையும் ஓடிப்போய் எடுத்துவிட்டார் .

இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல பூர்ணிமா அந்த பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இந்த வீட்டில் இருந்து வெளியேறினார் .

இந்த பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா போனது யாருக்கும் வருத்தமாக இருக்குமோ இல்லையோ நம்ப மாயாவுக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பூர்ணிமாவின் இந்த முடிவு பாராட்ட தக்கது என பலரும் கருத்து கூறி வருகின்றார் .

சிலர் பூர்ணிமா இந்த பணப்பெட்டியை எடுக்காவிட்டால் இந்த வார எவிக்சனில் நிச்சயம் வெளியேறிருப்பார் என்றும் கருத்து கூறுகின்றனர்.

இதையடுத்து இனி வரும் நாட்கள் போட்டியாளர்களுக்கு சவால் நிறைந்த நாளாக தான் கடக்கபோகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது .

Also Read : https://www.cinemamedai.com/latest-details-about-dhanush-captain-miller-movies-censor-and-run-time/

இப்படி இருக்கும் சூழலில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் புதிய இரு நபர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதுபோல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

என்ட்ரி ( New Entry ) சாங்குடன் வந்த அவர்களை கண்ட போட்டியாளர்கள் அதிர்ச்சியில் யாருப்பா நீங்க என்று கேட்க அவர்கள் சிரித்தபடி நாங்கள் போட்டிக்கு வரவில்லை ப்ரோமோஷனுக்காக வந்துள்ளோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து பெருமூச்சு விட்ட போட்டியாளர்கள் எந்த ப்ரோமோஷனுக்காக இந்த வந்தீர்கள் என்று கேட்க விஜய் டீவியில் விரைவில் சின்ன மருமகள் என்ற புதிய சீரியல் வர போகிறது அதற்கான ப்ரோமோஷனுக்கு தான் வந்தும் என தெரிவித்தனர்.

பின்னர் அந்த சீரியலுக்கான ப்ரோமோ வீடியோ பிக் பாஸ் வீட்டில் உள்ள டிவியில் போட்டு காண்பிக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top