Connect with us

அடுத்து Red Card இவருக்கு தான்..Plan போடும் House Mates!

Bigg Boss Tamil Season 7

அடுத்து Red Card இவருக்கு தான்..Plan போடும் House Mates!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது…இதில் பலவிதமான சண்டை சச்சரவுகள் இருக்கின்றது…இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு தகுதி உள்ள போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்…இதுவே பலருக்கு ஷாக் என்றும் சொல்லலாம்…

அவரால் இந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெரும்பாலானோர் கூறியதைக் கேட்டு கமல்ஹாசன் அதிரடியாக அவரை வெளியே அனுப்பினார்…அவரின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது…பலரும் பிரதீபுக்கு இப்போது சப்போர்ட் செய்தும் வருகின்றனர்…

போட்டியாளராக இருக்கும் போதே செம சண்டை போடும் மாயா,இந்த வாரம் கேப்டனாகவும் பதவி ஏற்று உள்ளதால் பிக்பாஸ் வீடு கலவரமாக தான் இருக்கின்றது.. அவர் திட்டமிட்டு 6 பேரை தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு அவர்களிடம் வேலை சொல்லி டார்ச்சர் செய்து வருகிறார்…இது இந்த வாரம் அதிகம் பேசப்படும் என தெரிகின்றது…

அவர் அடிமை போல் நடத்துவதாக கூறி சுமால் பாஸ் வீட்டார் வாக்குவாதம் செய்த புரோமோ காட்சிகளும் வெளியாகி இருந்தது….இந்த நிலையில் பிரதீப்பை போல் மற்றுமொரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற மாயா திட்டமிடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அது பெரும் சர்ச்சையை கிளப்பியும் வருகின்றது…

அந்த வகையில் பெட்ரூமில் ஐஷூ மற்றும் பூர்ணிமா உடன் உரையாடும் போது வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள பிராவோ நடந்து போகும் போது கூட அப்படியே குறு குறுவென பார்ப்பதாக கூறுகிறார்…அவர் தப்பானவர் என பேசி வருகின்றனர்…

இதற்கு ஐஷூவும் ஆமாம் எனக்கூறி அவர் ரொம்ப தப்பு தப்பா பார்ப்பதாக கூறுகிறார் இதைக்கேட்டு பூர்ணிமா ஷாக் ஆக ஐஷூ அவன் மூஞ்சி பார்த்து பேச மாட்டான் என்று கூறுகிறார்…அதனால் விரைவில் இவரையும் அனுப்ப வாய்ப்பு இருக்கும் என சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு - வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top