Connect with us

பிக் பாஸ் வீட்டில் வினுசாவிடம் மனம் விட்டு மன்னிப்பு கேட்ட நிக்சன் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் வினுசாவிடம் மனம் விட்டு மன்னிப்பு கேட்ட நிக்சன் – ப்ரோமோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது .

100 நாட்களுக்கு மேல் அனல் பறக்க தீயாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையிலும் போட்டியாளர்கள் மனதில் இன்னும் சில வன்மங்கள் தீக்குழம்பாய் கொந்தளித்துக்கொண்டு தான் இருக்கிறது .

இந்நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் நடைபெற்ற மிட் வீக் எவிக்சனில் சிறப்பாக விளையாடிய விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். அதன்படி பிக் பாஸ் டைட்டில் ரேஸில் தற்போது மாயா , அர்ச்சனா ,விஷ்ணு ,தினேஷ் மற்றும் மணி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று விசித்ரா , நிக்சன்,மற்றும் கடைசியாக எலிமினேட் செய்யப்பட்ட விஜய் ஆகிரியோர் என்ட்ரி கொடுக்கின்றனர்.

இதையடுத்து நிக்சனை தனியாக அழைத்து வந்த வினுஷா . நீங்க ஏன் இப்டி பண்ணீங்க எனக்கு அது எவ்ளோ ஹுர்ட் பண்ணிச்சு தெரியுமா என்று கோபத்துடன் அமைதியாக பேசுகிறார்.

இதற்கு பொறுமையாக பதில் கொடுக்கும் நிக்சன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து வினுஷா நீங்க எங்க வேணுமே டார்கெட் செய்யற மாறி இருக்கு இந்த விசயத்துல நான் செஞ்சது தப்புதான் நான் அதுக்கு பல முறை மன்னிப்பு கேட்டுட்டேன் இருந்தாலும் நீங்க என வேணுமே டார்கெட் பண்றமாரி இருக்கு என சற்று காட்டமாக நிக்சன் சொல்ல ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இந்நிலையில் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளே வருகை தந்திருக்கும் வேலையில் இன்னும் இந்த வீட்டில் என்னெல்லாம் நடக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top