Connect with us

பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாகடர் பட்டம்..முதலமைச்சர் ஸ்டாலின் கையால் பெறப்பட்டது!

Cinema News

பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாகடர் பட்டம்..முதலமைச்சர் ஸ்டாலின் கையால் பெறப்பட்டது!

1953ல் தனது இசை பயணத்தை துவங்கினார் பின்னணி பாடகி பி.சுசீலா…இவருக்கு மக்கள் மத்தியில் இன்று வரை தனி இடம் உண்டு…இந்த கால இளைஞர்கள் கூட இவரின் ரசிகர்களாக இருக்கின்றனர்,தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார்…இப்படி ஒரு சிறந்த சாதனை படைத்தவர் சுசிலா அவர்கள்..

ஐந்து முறை தேசிய விருது மூன்று முறை தமிழக அரசு விருது பத்ம விபூஷன் விருது வாங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல்..கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…இப்படி ஒரு மிக பெரிய சாதனையாளராக இருந்து வருகின்றார் இவர்..

இந்நிலையில் இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது…அதில் நிறைய பேருக்கு விருது வழங்கப்பட்டது அதில் சிறப்பம்சமாக ஒன்று நடந்தது..

கலைவாணர் அரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார்…இதில் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வந்த முதல்வர் ஸ்டாலின் பாடகி பி.சுசிலா அவர்களுக்கு கவுரவ டாகடர் பட்டம் வழங்கி கவுரவித்தார் அதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது…

இதுமட்டுமின்றி பி.சுசிலா பாடிய பாடலில் தனக்கு பிடித்த பாடல் இதுதான் என்று நீ இல்லாத உலகத்திலே எனும் பாடலை முதல்வர் ஸ்டாலின் பாடிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது…இப்படி மிகவும் பிரம்மாண்டமாக இந்த விழா நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் - இயக்குநர் செல்வராகவன் புகழாரம்..!!

More in Cinema News

To Top