Connect with us

“நான் த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்கிறேன்! தைரியம் சொன்ன பிரபல நடிகர்!”

Cinema News

“நான் த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்கிறேன்! தைரியம் சொன்ன பிரபல நடிகர்!”

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகானுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துக்கு ஒரு நடிகைக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாக இருக்கும். இந்த கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

நான் த்ரிஷாவுக்கு ஆதரவாக நிற்கிறேன். மேலும் இது போன்ற கொடூரமான கருத்துக்களுக்கு உள்ளாகும் பெண்ணுக்கு நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சிரஞ்சீவியின் இந்த கருத்தை அடுத்த நடிகர் த்ரிஷா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top