Connect with us

சினிமாவில் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் – நடிகை நிகிலா விமல் ஓபன் டாக்..!!

Cinema News

சினிமாவில் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் – நடிகை நிகிலா விமல் ஓபன் டாக்..!!

சினிமாவில் தேவையின்றி நடக்கும் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என நடிகை நிகிலா விமல் ஓப்பனாக பேசியுள்ளார்.

மலையாள திரையுலகில் இருக்கும் வெற்றிகரமான ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிகிலா விமல்

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.

கடைசியாக சரத்குமார் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை விமலுக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைத்தது .

இதையடுத்து இவரது நடிப்பில் தற்போது இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிகிலா விமல் கூறியதாவது :

கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும். படத்திற்கு தேவைபடாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதற்கு பதிலாக வைக்காமல் இருப்பதே நல்லது.

சமீபத்தில் வெளிவந்த ஆவேஷம், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்கள் மாதிரி தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை தவிர்க்கவேண்டும் என இதை செய்தால் சினிமா அடுத்த கட்டத்திற்கு நாகவர்வது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சினிமாவும் உருவாகும் என நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆசிய கோப்பை தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

More in Cinema News

To Top