Connect with us

கோர விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் – நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்..!!

Cinema News

கோர விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் – நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்..!!

பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ். இளம் வயதிலேயே பல சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதையடுத்து தற்போது ஏகப்பட்ட படங்களில் போகவும் பிசியாக நடித்து வரும் மேத்யூ தாமஸ் குடும்பத்தில் தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.

கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவில் மேத்யூ தாமஸ் குடுமபத்தினர் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது அவர்கள் சென்ற கார் கோர விபத்தில் சிக்கியுள்ளது . எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள மேத்யூ தாமஸின் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிலிர்க்க வைக்கும் காட்சிகள் - ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top