Connect with us

GOAT படத்தின் தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு..!!

Cinema News

GOAT படத்தின் தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு..!!

விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் GOAT படம் குறித்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார் .

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தற்போது தனது 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு கோட் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் விறுவிறுப்பான படப்பிடிப்பு வேலைகளுக்கு நடுவில் இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் .

GOAT படத்தில் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட VFX பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத உயர்ரக தொழில் நுட்பங்கள் இப்படத்தில் உபயோகிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்து வரும் நிலையில் தற்போது விஜய் சம்பந்தப்பட்ட VFX பணிகள் முடிந்துள்ளது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  50 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் சூரியின் கருடன் - விஸ்வரூப வெற்றியை கேக் வெட்டிக்கொண்டாடிய படக்குழு..!!

More in Cinema News

To Top