Connect with us

திருச்செந்தூர் கோயிலில் எந்த கட்டணனும் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

Featured

திருச்செந்தூர் கோயிலில் எந்த கட்டணனும் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என தமிழ்நாடு அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘கந்த சஷ்டி விழா’ புகழ் பெற்றது.

உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வர அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என தமிழ்நாடு அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை சிறப்பு கட்டணம் குறித்து வீடியோ வெளியிட்டவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .

ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று மனப்பால் குடித்து கொண்டு, பகல் கனவை கண்டுகொண்டிருப்பவர்கள்தான் இந்த விஷம பிரச்சாரத்துக்கு பின்னணியில் இருப்பவர்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை அதிதி ராவ் சேலையில் அழகிய போஸ் Viral..

More in Featured

To Top