Connect with us

“அதிக விலை என்பதால் எனக்கு அழுத்தம் இருக்கும் என்பது மட்டும் உறுதி! மிச்சேல் ஸ்டார்க் கருத்து!”

IPL 2024

“அதிக விலை என்பதால் எனக்கு அழுத்தம் இருக்கும் என்பது மட்டும் உறுதி! மிச்சேல் ஸ்டார்க் கருத்து!”

2024-ம் ஆண்டு IPL தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. 333 வீரர்களை உள்ளடக்கிய பட்டியலில் இருந்து 10 அணிகளும் தங்களுக்கு நிரப்பப்பட வேண்டிய இடங்களை பூர்த்தி செய்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுப்பதில் குஜராத் டைட்டன்ஸ் (GT), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

இதன் மூலம் IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறும் போது, “IPL ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு எடுக்கப்படுவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்தச் செய்தி முதலில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதிக அளவிலான தொகைக்கு என்னை எடுத்திருப்பதால் எனக்கு அழுத்தம் இருக்கும் என்பது மட்டும் உறுதி. IPL போட்டிகளில் சில ஏற்றத்தாழ்வுகள் வந்து செல்லும். என்னுடைய திட்டங்கள் பெரும்பாலும் மாறாது. பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியில் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவேன் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in IPL 2024

To Top