Connect with us

“பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் மர்மமான முறையில் மரணம்!”

Cinema News

“பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் மர்மமான முறையில் மரணம்!”

கேரள மாநிலம் கோட்டயம் பாம்படி பகுதியில் தனியார் ஓட்டலின் மதுபான விடுதி அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

அந்த விடுதியின் செக்யூரிட்டி கண்ணாடியின் கதவைத் தட்டினார். அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், அங்கிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்துப் பார்த்தனர்.

உள்ளே இருந்தவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இறந்தது பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் (47) என்பது பின்னர் தெரியவந்தது.

அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "2 நண்பர்களின் கதை 'Salaar' படத்தின் கதை! இரண்டாம் பாகத்தில்..! இயக்குனர் பிரசாந்த் நீல் சொன்ன தகவல்!"

More in Cinema News

To Top