Connect with us

“சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் Latest Updates! படத்தின் தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!”

Cinema News

“சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் Latest Updates! படத்தின் தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!”

சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமான கங்குவாவை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படம் மூலம் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானியும், முக்கியமான பாத்திரங்களில் யோகி பாபு, நட்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.

கங்குவாவின் முதல் அபிஸியல் அப்டேட் வரும் போதே, இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதேபோல், 3D டெக்னாலஜியில் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் பீரியட் ஜானரில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகிறது கங்குவா. அப்போது முதலே கங்குவா படத்திற்கு தாறுமாறாக ஹைப் ஏற்பட்டது. அதன்பின்னர் சூர்யா பிறந்தநாளில் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இன்னும் மாஸ் காட்டியது.

கடைசியாக தீபாவளி ஸ்பெஷலாக கங்குவா படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. தீப்பந்தத்துடன் சூர்யா மிரட்டலாக போஸ் கொடுத்திருந்த இந்த போஸ்டர், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியிருந்தது. இந்நிலையில், கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செம்ம மாஸ்ஸான அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, கங்குவா மொத்தம் 38 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் 3D Version, IMAX Version என டெக்னிக்கலாகவும் கங்குவா மாஸ் காட்டும் எனக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துள்ள இந்த அப்டேட்கள், சூர்யா ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. இதன் மூலம் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்" - எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

More in Cinema News

To Top