Connect with us

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கங்கனா..சிறப்பான ஆள் நீங்க!

Cinema News

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய கங்கனா..சிறப்பான ஆள் நீங்க!

உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது..கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேனான விராட் கோலி தனது 50-வது சதத்தை விளாசினார்…அவரின் இந்த அபார ஆட்டம் பெரிதளவில் பாராட்ட பட்டது பலரும் இந்த சிறந்த ஆட்டத்தை கொண்டாடினர்..பல முன்னணி கிரிக்கெட்டர் பல சிறந்த சினிமா பிரபலங்கள் இவரை கொண்டாடினர்…

இதன் மூலம் கிரிக்கெட் உலகத்தில் மூத்தவராக விளங்கும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறிடியத்த விராட் கோலி சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார் அது பெரிதளவில் பேசவும் பட்டது.

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் டெஸ்ட் போட்டியில் 29 சதங்கள் டி 20-ல் ஒரு சதம் என ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான ஆட்டங்களிலும் 80 சதங்களை இதுவரை அடித்துள்ளார் வெறித்தன நாயகன் விராட் கோலி…இவரின் அசாத்திய ஆட்டத்தை உலகம் பாராட்டி வருகின்றது…

விராட் கோலியின் இந்த சாதனையையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல பதிவுகளை போட்டு வருகின்றனர்…அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்…

என்ன ஒரு அற்புதம் தனது சாதனைகளை முறியடிப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணத்தை கோலி அமைத்துள்ளார் அவர் நடக்கும் பூமியை மற்றவர்கள் வணங்க வேண்டும்…அவர் அதற்கு மிகவும் தகுதியானவர் அவ்வளவு அழகான மதிப்பும், சிறந்த பண்பும் கொண்ட உயர்ந்த மனிதர் என்று புகழ்ந்து இருக்கின்றார் கங்கனா அவர்கள்..இவரின் இந்த போஸ்ட் இப்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Cinema News

To Top