Connect with us

“Good Night பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?!”

Cinema News

“Good Night பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?!”

2023 இந்த ஆண்டு தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் அளவிற்கு பல நல்ல திரைப்படங்கள் வெற்றியடைந்தது. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமின்றி சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களும் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை தழுவியது. டாடா, குட் நைட், போர் தொழில், அயோத்தி போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.

இதில் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் குட் நைட். இப்படத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எதார்த்தனமான கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை கிடைத்து வெற்றியடைந்தது.

இந்நிலையில், அறிமுக படத்திலேயே முத்திரை பதித்த சென்சேஷன் இயக்குனராக மாறிய விநாயக் சந்திரசேகரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளாராம். சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின் AR முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பின் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top