Connect with us

Killer Killer தனுஷின் குரலில் Gvயின் இசையில் தெறிக்கவரும் பாடல்..கேப்டன் மில்லர்!

Cinema News

Killer Killer தனுஷின் குரலில் Gvயின் இசையில் தெறிக்கவரும் பாடல்..கேப்டன் மில்லர்!

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் தின விருந்தாக வர இருக்கின்றது,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றார்…இப்படி இருக்கும் நிலையில் முதல் பாடல் அப்டேட் வந்து இருக்கின்றது…

கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் அவர்…

இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் அதனை போல இந்த திரைப்படத்தில் ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சத்ய ஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மக்களிடையே மிரட்டியதுடன் படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் அதிகமானது முதலில் டிசம்பர் வெளியீடாக இருந்த இப்படம் இப்போது பொங்கலுக்கு மாறி இருக்கின்றது அதனை போல இப்படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் பாடல் நவம்பர் 22 அப்போது வர இருக்கிறதாக அப்டேட் வந்து உள்ளது.

இந்த பாடலை கபீர் வாசுகி என்பவர் எழுதி இருக்கின்றார் தனுஷ் அவர்களே இதனை பாடி உள்ளார்..பொறுத்திருந்து பார்போம் பாடல் எப்படி வரப்போகிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top