Connect with us

தனுஷின் Captain Miller பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Cinema News

தனுஷின் Captain Miller பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனக்கு என்று தனி பாணியை வைத்து இருக்கிறார். அவரின் முந்தைய படங்களான ராக்கி, சாணி காயிதம் படத்தில் வன்முறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகமாகவே இருக்கும். அதே பாணியை தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்திலும் பயன்படுத்தி உள்ளார். இந்த படத்திலும் வன்முறை காட்சிகள், துப்பாக்கி குண்டு சத்தம் என படம் முழுக்க கொஞ்சம் ரகடாகவே இருந்தது. கேப்டன் மில்லர் படத்தில் பல கெட்ட வார்த்தை வசனங்களும், குறிப்பாக ஒரு இடத்தில், வேலைக்கார நாய்கள் என்று இருந்த வசனத்தை மூட்போட்டு நாய்கள் என்று மட்டும் மாற்றி உள்ளதாகவும் அதே போல், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கட் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி போட்டு U/A சான்றிதழ் கொடுத்தனர். தனுஷுக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அண்ணனாக செங்கோலனாக என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். தனது கிராமத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பயத்தைப் பார்த்து அவர்களின் படையில் சேர்வதை லட்சியமாக வைத்து இருக்கும் தனுஷ். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு பிரிட்டிஷ் படையில் சேர்கிறான்.

ஆனால், பிரிட்டிஷ் படை தனது, கிராமத்து மக்களையே கொன்று குவிக்க உத்தரவிடுகிறது. தன் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதை எண்ணி, மனம் வருந்தி பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறுகிறான். பின், இதற்கு எல்லாம் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை கொன்றுவிட, ஆங்கிலேயர்கள் தேடும் கேப்டன் மில்லராக மாறுகிறார் தனுஷ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் தனது அசுரத்தனமான நடிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், தனுஷ் இப்படத்தில், மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிவராஜ் குமார், இந்த படத்திலும் தெறிக்கவிட்டுள்ளார் தனுஷின் அண்ணன் செங்கோலனாக சிவராஜ்குமார் சரியான தேர்வு என்றும், அவருக்கு இன்னும் சில காட்சிகள் கூடுதலாக இருந்த இருந்தால் நன்றாக இருந்து என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறினார். அண்ணன் தம்பி இருவரும் வேறுவேறு காரணங்களுக்காகப் போராடினாலும், அவர்கள் ஒன்றாக இணையும்போது, திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி மிரட்டியது. மேலும், சுதீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன், ஜான் கோக்கன், எட்வர்ட் சோனென்ப்ளிக், வினோத் கிஷன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தி உணர்ந்து நடித்துள்ள போதும்.

தனுஷ் தனது அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் ரூ.8.65 வசூலித்து பொங்கல் ரேஸில் முதல் இடத்தில் உள்ளது. இனி வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் மேலும், வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top