Connect with us

இதுக்கு கொஞ்சம் புதுசா தாங்க இருக்கு – சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முன்னோட்டம் வெளியீடு..!!

Cinema News

இதுக்கு கொஞ்சம் புதுசா தாங்க இருக்கு – சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முன்னோட்டம் வெளியீடு..!!

சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் நண்பனாக திரைப்பயணத்தை தொடங்கி வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை அனைத்திலும் காமெடியியல் கலக்கி தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சந்தானம் .

தமிழ் திரையுலகில் தற்போது கலகலப்பான ஹீரோவாக வலம் வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மேகா ஆகாஷ், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது .

பொதுவாக நகைச்சுவைகும் நகைச்சுவை படங்களுக்கும் பெயர்போன நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த டக்குப்பட்டி ராமசாமி படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கு என்பதை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top