Connect with us

சென்னையை வச்சு செய்யும் வருணபகவான் : விடாமல் பெய்யும் கனமழையால் குளிரில் நடுநடுங்கும் சென்னை வாசிகள்..!!

Featured

சென்னையை வச்சு செய்யும் வருணபகவான் : விடாமல் பெய்யும் கனமழையால் குளிரில் நடுநடுங்கும் சென்னை வாசிகள்..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் சென்னை வாசிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், போரூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், கிண்டி,அம்பத்தூர், பாடி, கள்ளிகுப்பம், திருமுல்லைவாயில், அயப்பாக்கம், ஆவடி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது . இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மேடு, பள்ளம் அறியாது தட்டுத் தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் சென்னையின் முக்கிய நீர் ஆகாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது . இதனால் உபரி நீர் திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக உயர்ந்துள்ளது .

உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனடியாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top