Connect with us

இதுவரை உலக கோப்பை வென்ற கேப்டன்களை கௌரவிக்கும் பிசிசிஐ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாளைய இறுதி போட்டி

CWC23

இதுவரை உலக கோப்பை வென்ற கேப்டன்களை கௌரவிக்கும் பிசிசிஐ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாளைய இறுதி போட்டி

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இதுவரை உலக கோப்பை வென்ற கேப்டன்களை வரவழைத்து அவர்களை பிசிசிஐ கவுரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை பிற்பகல் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது .

இந்நிலையில் இந்த உலககோப்பை இறுதி போட்டியின்போது நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இதுவரை உலக கோப்பை வென்ற கேப்டன்களை வரவழைத்து அவர்களை பிசிசிஐ கவுரவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், வரும் 19ம் தேதி நாளை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப்போட்டியில், இதுவரை கோப்பை வென்ற அணிகளின் கேப்டன்கள் அணிவகுப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உலக கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களையும் பிசிசிஐ கௌரவிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள ஐசிசியின் நிகழ்ச்சி நிரலில் இம்ரான் கான் படம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top