Connect with us

தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை : பொதுமக்களுக்கு முதல் ஆளாக அலெர்ட் கொடுத்த மாவட்ட ஆட்சியர்..!!

Featured

தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை : பொதுமக்களுக்கு முதல் ஆளாக அலெர்ட் கொடுத்த மாவட்ட ஆட்சியர்..!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது கோவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள் மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Featured

To Top