Connect with us

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டயகிளப்பிய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு..!!

Featured

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டயகிளப்பிய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டயகிளப்பிய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒவ்வரு போட்டியிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தான் இந்திய வீரர் முகமது ஷமி . அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் பல சாதனைகளை நிகழ்ந்திருக்கும் இந்திய வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர் . இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமி பல அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.

ஒரு உலக கோப்பையில் அதிக முறை (3) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை (4) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பையில் இந்தியரின் சிறப்பான பந்து வீச்சு (9.5-0-57-7) , ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் (7) வீழ்த்திய இந்தியர் , WC-ல் குறைந்த இன்னிங்ஸ்-ல் (17) 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான பல தரமான சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் ஷமியின் அபாரமான திறமையை கண்டு நெகிழ்ந்து போன உ.பி அரசு அவரின் சொந்த ஊரான சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தது .

சிறிய கிராமத்தில் இருந்து வந்து தனது திறமையால் மட்டுமே முன்னேறி இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோதனை கடந்து பல சாதனைகளை படைத்தது வரும் ஷமியை கவுரவிக்கும் விதமாக தற்போது அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக இந்திய வீரர் முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு நாட்டு மக்களும் இந்நாள் முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் - RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top