Connect with us

D51 படத்தில் நடிகர் தனுஷின் Look இதுதானா?! ஷூட்டிங்கை ரத்து செய்த Police!

Cinema News

D51 படத்தில் நடிகர் தனுஷின் Look இதுதானா?! ஷூட்டிங்கை ரத்து செய்த Police!

நடிகர் தனுஷ் இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ராம்மோகன் ராவ், சுனில் சாரங்க் தயாரித்து வருகின்றனர்.

இந்தப்படத்தின் படப்படிப்பு திருப்பதியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தனுஷ் பிச்சைக்காரன் லுக்கில் தான் நடித்து இருக்கிறார். நேற்று காலை 6 முதல் மதியம் 1 மணி வரை இதன் படப்படிப்பை நடத்திக்கொள்ள திருப்பதி போலீஸார் அனுமதித்திருந்தனர்.

திருமலைக்குச் செல்லும் அலிபிரி நுழைவு வாயில் அருகே, கருடன் சிலை இருக்கும் இடத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. இதற்காக போக்குவரத்தை மாற்றுப் பாதையில் போலீஸார் திருப்பி விட்டனர். இதனால் திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பல வேன்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கூட அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல முடியாமல் நின்றன. இதன் காரணமாக பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குத் தரிசனத்துக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் விஷக் காய்ச்சல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top