Connect with us

மயிலையில் 25ஆவது பட்டத்தை படிக்க முன்வந்த 82வயது முதியவர்…படிப்பு ரொம்ப முக்கியம்…

General News

மயிலையில் 25ஆவது பட்டத்தை படிக்க முன்வந்த 82வயது முதியவர்…படிப்பு ரொம்ப முக்கியம்…

World புக் of ரெகார்டஸ் பக்கத்தில் மற்றோருவர் இணைய உள்ளார்…அதாவது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி அவர்கள்.

இவரது வயது 82. இவர் பாலிடெக்னிக்கில் டீச்சராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார் குருமூர்த்திக்கு கல்வியின் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது இதன் காரணமாக இவர் 1964-ம் ஆண்டு முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்புகள் படித்திருக்கிறார்…அப்போதே அப்படி ஒரு சிறப்பை செய்து இருக்கின்றார்…

இதுவரை ஆசிரியர் குருமூர்த்தி பி.ஏ,எம்.ஏ,எம்.பில்,பிஎச்.டி. உள்ளிட்ட 24 பட்டங்களை பெற்றிருக்கிறார்….அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளை முடித்த குருமூர்த்தி, பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்திருக்கிறார்…இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்…

ஆசிரியர் குருமூர்த்தி கல்வி கற்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்.24 பட்டங்களை முடித்த குருமூர்த்திக்கு 82 வயதில் இன்னொரு ஆசை வந்து இருக்கின்றது அதாவது 25 வது பட்டப்படிப்பு.25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ. போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை தேர்வு செய்துள்ளார்…அதனை படிக்க ஆவலாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்..

மயிலாடுதுறையில் புதிதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தான் எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார் அவர்..அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்காக போயிருக்கிறார் குருமூர்த்தி..அங்கு ராஜ வரவேற்பு இருந்தது….இப்படி வயதான ஒருவர் படிப்பதற்காக வருவதை பார்த்து பலரும் அவரை பாராட்டினர்..அவரும் நிச்சயம் இதனை முடிப்பேன் என சொல்லி இருக்கின்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in General News

To Top