Connect with us

தாராபுரம் அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்

Featured

தாராபுரம் அருகே நடந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

திருப்பூர் மாவட்டம். தாராபுரம் வட்டம். மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் இன்று (16.11.2023) மாலை டேங்கர் லாரியும். நான்கு சக்கர வானமும் தேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது .

இந்த விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த திருபாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (வயது 50). கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், வஞ்சியம்மா நகரைச் சேர்ந்த திருதமிழ்மணி (வயது 50), அவரது மனைவி சித்ரா (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள், மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கலாராணி (வயது 55) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  CSK வின் இலக்கு என்னவாக இருக்கும் - சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top