Connect with us

சென்னையில் போலீசாரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்..!!

Featured

சென்னையில் போலீசாரால் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்..!!

சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். உத்தரவின்பேரில்

காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” (DABTOP Drive Against Banned Tobacco Products) என்கிற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 29.01.2024 முதல் 04.02.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 160 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 24 கிலோ மாவா, ரொக்கம் ரூ22,180/-, 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இலகு ரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள்.

பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்னதான் தமிழ்நாடு காவல் துறையினர் படாதபாடு பட்டு போதை பொருட்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் பிடித்து வந்தாலும் மறுபக்கம் போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று தான் வருகிறது.

இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் பொதுமக்களும் இதுகுறித்த ஆபத்தை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் - எந்த படம் தெரியுமா..?

More in Featured

To Top