Connect with us

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் – அமைச்சர் சேகர்பாபு

Featured

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் – அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது :

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் .

கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .

வெகு விரைவில் மக்களுக்கு பயன்தரும் வகையில் ATM மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி ஏப்ரலில் நிறைவு பெறும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் தமிழக அரசால் தெரிவிக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்படும்போது புகார்கள் சொல்லியே மாய்ந்து போனார்கள்.

கோயம்பேட்டில் 7 வருடங்கள் கழித்தே ஆம்னி பேருந்துகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 35 நாட்களுக்குள் 90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றபட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top