Connect with us

மக்களே உசார் : IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் 1.8 லட்சம் மோசடி..!!

Featured

மக்களே உசார் : IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் 1.8 லட்சம் மோசடி..!!

IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் 1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக பயணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் தனது பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக IRCTC இணையதளத்தில் For Help என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து மறுமுனையில் பேசிய அந்த நபர் ஸ்ரீதரன் வங்கி விவரங்களை வழங்க சொல்ல அவரும் வழங்கியுள்ளார் . இதையடுத்து சில நிமிடங்களில் ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1.8 லட்சம் எடுக்கப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் செய்வதறியாது தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் IRCTC இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Featured

To Top