Connect with us

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்! Viral!

Politics

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்! Viral!

சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த பிறகும், பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பணி முடிவடையும் நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. இதையடுத்து, சிஎம்டிஏ சார்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லும் பாதையில் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு, பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் இன்று பேருந்து முனையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், எஸ்எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக எம்பி டிஆர் பாலு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையமானது ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று திறப்பு விழாவை முன்னிட்டு பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்துவைத்து, மரியாதை செலுத்தினார். பேருந்து சேவையையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக பேட்டரி காரில் பேருந்து முனையத்தை அமைச்சர்களுடன் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

பேருந்து முனைய வசதிகள்:

  • தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் இதுவே. 88.52 ஏக்கரில் இப்புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது. பயண சீட்டு பெறுமிடம், பயணிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல கை வண்டிகள், மின் வாகனங்கள், தூய்மை இயந்திரங்கள், மின் தூக்கிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு உணர்வு தரையமைப்பு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • இதுதவிர, பேருந்து முனையத்தில் 100 கடைகள், இரண்டு அடி தளங்களில் 2769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கான ஒப்பனை அறைகள், குடிநீர் வசதிகள், இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
  • தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனித்தனியாக 140 (100+40) ஓய்வறைகள், ஓட்டுநர்களுக்கு தனியாக 340 ஓய்வறைகள் (படுக்கை வசதியுடன்), ஏடிஎம் வசதி, வரைபட வசதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
  • பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • SETC, TNSTC, ஆம்னி பேருந்துகளுக்கு 16 நடைமேடைகளை கொண்ட 215 பேருந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
  • ஒரேநாளில் 2310 பேருந்துகளை இப்பேருந்து முனையத்தில் இருந்து இயக்க முடியும்.
  • சுமார் 800க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
  • அரசுப் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளன.
  • சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு MTC பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் மாநகர போக்குவரத்து கழக முனையம் ஜி.எஸ்.டி சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
  • பூங்காக்கள், நீர் வளங்கள், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, முக அடையாளம் காட்டும் கேமிராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு முறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் முதல்முறையாக 15 வருடத்துக்கு இப்பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பினை ஒரு தனி செயல்பாட்டாளரிடம் ஒப்பந்த வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
See also  மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

இன்றே செயல்பாட்டுக்கு வந்தது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையமானது இன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்படவுள்ளது. எனவே மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல எதுவாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படவுள்ளது. இரவு நேரப் பேருந்துகளுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top