Connect with us

ரூ.3,500 கோடி பட்ஜெட்டில் கலைஞரின் கனவு இல்லம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

Thangam_Thennarasu

Featured

ரூ.3,500 கோடி பட்ஜெட்டில் கலைஞரின் கனவு இல்லம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

2024-25 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2030க்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை எட்ட ரூ.3,500 கோடி பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல ஜனரஞ்சக அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர், தமிழகம் இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளதாக பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மேலும், பல்வேறு திட்டங்களை அறிவித்த அவர், குடிசையில் வாழ்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இதன் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். இதற்காக, பட்ஜெட்டில் ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டத்திற்கு கலைஞரின் கனவு இல்லம் என பெயர் வைப்பதாகவும் அறிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் குடிசைகளே இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி..!!

More in Featured

To Top