Connect with us

“தலைவருக்கு வில்லனாகும் நடிகர் ராகவா லாரன்ஸ்! ப்ளூ சட்டை மாறன் கொடுத்த Reaction!”

Cinema News

“தலைவருக்கு வில்லனாகும் நடிகர் ராகவா லாரன்ஸ்! ப்ளூ சட்டை மாறன் கொடுத்த Reaction!”

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைப் பயிற்சி இயக்குநராக கமிட்டாகியுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றியால் மீண்டும் ரஜினியுடன் இணைந்தது சன் பிக்சர்ஸ். அதேபோல், தலைவர் 171 மூலம் ரஜினி – லோகேஷ் கூட்டணியும் முதன்முறையாக இணைகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ்.

போதைப் பொருள் கடத்தல், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என கேங்ஸ்டர் ஜானர் படங்கள் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வருகிறார் லோகேஷ். அதேபோல், அவரது படங்களில் மல்டி ஸ்டார்ஸ் கண்டிப்பாக இருப்பதும் வழக்கமாகிவிட்டது. அதன்படி, தலைவர் 171 படத்திலும் ரஜினியுடன் இன்னும் சில ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதன்படி தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி ராகவா லாரன்ஸிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவரும் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் சொலப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தலைவருக்கே வில்லனாக நடிக்கவுள்ளது எதிர்பார்க்க வைத்துள்ளது. அதேநேரம் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதை நெட்டிசன்கள் ட்ரோல், செய்தும் வருகின்றனர். சும்மாவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காமல் படு தோல்வியடைந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி அவரது நடிப்பும் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்படுகின்றன. இதனை ப்ளூ சட்டை மாறனும் ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார். தலைவர் 171ல் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடித்தால், அது ’Gangster Spoof…? படம் மாதிரி இருக்கும் என ட்ரோல் செய்துள்ளார். மேலும், ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடித்தால், ‘தலைவர் 171’ படம் ‘கிழிஞ்சுது கிருஷ்ணகிரி’ தான் எனவும் நடிகர் விசு ஸ்டைலில் பங்கம் செய்துள்ளார். அதேபோல், இன்னொரு நெட்டிசன், ‘ராகவா லாரன்ஸுக்கு பதிலாக ரஜினியே வில்லனாக நடித்துவிடலாம்’ என ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிநடைபோடும் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

More in Cinema News

To Top