Connect with us

“இந்த பாடலை பாடியவர் உங்கள் ‘Golden Star’ ஜப்பான்! ‘டச்சிங் டச்சிங்’ Video Song Out Now!”

Cinema News

“இந்த பாடலை பாடியவர் உங்கள் ‘Golden Star’ ஜப்பான்! ‘டச்சிங் டச்சிங்’ Video Song Out Now!”

கார்த்தி நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’டச்சிங் டச்சிங்’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

GV பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கார்த்தி மற்றும் இந்திராவதி சௌகான் ஆகிய இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த பாடலை கார்த்தி பாடியதை அடுத்து ’இந்த பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான்’ என்று சப்டைட்டில் வருவதை அடுத்து கார்த்திக்கு ’கோல்டன் ஸ்டார் என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பட்டத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் உள்பட பல ஸ்டார் பட்டங்கள் நடிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கூலி' படத்தில் தலைவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா..? சஸ்பென்ஸ் வைத்த படக்குழு..!!

More in Cinema News

To Top