Connect with us

கேம் சேஞ்சர் படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!! என்ன தகவல்னு உள்ள வந்து பாருங்க ப்ரோ…

Cinema News

கேம் சேஞ்சர் படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!! என்ன தகவல்னு உள்ள வந்து பாருங்க ப்ரோ…

ராம் சரண் இயக்கத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கொடுத்துள்ள ஷாக்கிங் தகவல் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்கள் பட்டியலில் டாப் 3 இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர் . இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்கள் அசுர வேகத்தில் உருவாகி வருகிறது.

இதில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தேவையான ப்ரோமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த பக்கம் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் பணிகள் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது.

ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தாமதம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ சுவாரஸ்யமாக பேசியுள்ளார் . நல்ல திரைப்படங்கள் உருவாக நீண்ட நாட்கள் ஆகும் என்றும், பிரம்மாண்ட இயக்குநர்கள் தங்களுக்கு திருப்தி கிடைக்கும் வரை படம் இயக்குவார்கள் என்றும் கடைசியில் ஒரு நல்ல படைப்பாக வெளிவந்தால் மட்டும் எனக்கு போதும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top