Connect with us

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்..!!

Featured

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்..!!

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் சங்கரய்யா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

1941ல் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார்.

திட்ட தட்ட 18 மாதங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவர், மீண்டும் கல்லூரி மாணவர்களை திரட்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் . அடுத்தடுத்து மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் பாளையங்கோட்டை சிறையில் சங்கரய்யா அடைக்கப்பட்டார்.

1964ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் . இதுமட்டுமின்றி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 சங்கரய்யா முறை பதவி வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்டவைகளுக்காக குரல் பெரியளவில் குரல் கொடுத்தவர் சங்கரய்யா.

வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, 95 வயதிலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடியவர் சங்கரய்யா.

தமிழ்நாடு அரசின் தகைசால் விருது முதல் முறையாக 2021ம் ஆண்டு சங்கரய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது . தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ₹10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்த சங்கரய்யா தனது 102வது வயதில் சென்னையில் இன்று உடல்நல குறைவால் காலமானார்.

தமிழ்நாட்டில் காலத்தில் எப்போதும் மறக்கமுடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சங்கரய்யாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top