Connect with us

“தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!”

Sports

“தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!”

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பிற்பகல் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

அடுத்த தலைமுறை வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி KL ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் அணியில் இளம் வீரர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கக்கூடும்.

இதைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் அல்லது திலக் வர்மா, ரஜத் பட்டிதார் ஆகியோர் பேட்டிங்வரிசையில் இடம் பெறக்கூடும். சுழற் பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பிரதான வீரர்களாக இருக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் களமிறங்கக்கூடும்.

இந்த ஆண்டில் T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங், 50 ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், உள்ளூர் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக ரன்வேட்டையாடி வரும் ரஜத் பட்டிதார் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் அதிக அளவிலான இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

இந்தத் தொடரில் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் காயம் காரணமாக அன்ரிச் நோர்க்கியா, லுங்கி நிகிடிஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இதே ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 202 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி சுழற்பந்து வீச்சைஅணுகுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Sports

To Top