Connect with us

அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய சாய் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Featured

அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய சாய் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது .

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது .உலக புகழ் பெற்ற ஜோனஸ்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் இப்போட்டி தொடங்கியது.

இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்திலிருந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணி சடசடவென விக்கெட்டுகளை விடத்தொடங்கியது. 27 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 116 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா அணி.

தென்னாப்பிரிக்கா அணி ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் பந்து வீசும் முன் முதல் 15 ஓவர்களிலேயே அதிக ரன்களை சேர்த்து விட வேண்டும் என திட்டமிட்டது. அதனால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முயற்சி செய்தனர். முகேஷ் குமார் ஓவர்களில் ஓரளவு ரன் சேர்த்த தென்னாப்பிரிக்க வீரர்களால் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை.

அத்துடன் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப், ஆவேஷ் ஓவர்களில் அடித்த ஆட முற்பட்டு தங்கள் விக்கெட்களை வரிசையாக இழந்தனர். அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட், ஆவேஷ் கான் 4 விக்கெட்கள் என பிரமாதமான பௌலிங்கை இந்திய அணி வெளிப்படுத்தியது. இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் இளம் புலி ருதுராஜ் களமிறங்கினர்.இதில் சிறப்பாக விளையாடுவர் என்று பெரிதும் எதிர்பார்க்கபா ருதுராஜ் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார் . இதையடுத்து சாய் சுதர்சனுடன் ஷ்ரேயஸ் கூட்டணி அமைத்தார்.

அறிமுக போட்டி என்று பதற்றப்படாமல் பொறுப்புடன் ஆடிய சாய் அரை சதம் கடந்து அசத்தினார் .மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயஸ் அரை சதம் கடந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். எளிய இலக்கை அசால்டாக விரட்டிய இந்திய அணி 27 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி கெத்துக்காட்டியுள்ளது.

More in Featured

To Top