Connect with us

இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை – தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ – டெல்லி அணிகள்..!!

Featured

இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை – தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ – டெல்லி அணிகள்..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை ,பஞ்சாப் , குஜராத் அணிகள் வெளியேறி இருந்த நிலையில் தற்போது டெல்லி , லக்னோ அணிகளும் வெளியேறியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 64 ஆவது லீக் போட்டியில் LSG – DC அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

அதன்படி ஆரம்பம் முதல் பொறுப்புடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது.

எப்படியும் வென்றிடலாம் என்ற முனைப்பில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஆரம்பம் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ராகுல் , டி காக் என முன்கள வீரர்கள் அனைவரும் ஆடுததடுத்து ஆட்டமிழக்க அங்கே லக்னோவின் தோல்வி ஏறத்தாழ ஊர்தியாகிவிட்டது.

பின்னர் வந்த வீரர்களில் நிகோலஸ் பூரான் மற்றும் ஹர்சத் கான் அரை சதம் கடந்து போராடியும் அவர்களால் அணியின் வெற்றிப்பாதை அழைத்துவர முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

இந்த பக்கம் 20 ரன்கள் வித்தியாசயத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தாலும் புள்ளிகள் பட்டியலில் பின் தங்கி இருந்ததால் லக்னோ அணியுடன் சேர்ந்து டெல்லி அணியும் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ATMAN ON FIRE " Thug Life படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் சிலம்பரசன்..!!

More in Featured

To Top