Connect with us

பஞ்சாப் அணிக்கு டாட்டா காட்டிய பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

Featured

பஞ்சாப் அணிக்கு டாட்டா காட்டிய பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பஞ்சாப் அணியை தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 58 ஆவது லீக் போட்டியில் RCB – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

சிற்பங்க விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது . அந்த அணியில் அபாரமாக ஆடிய விராட் கோலி 92 ரன்கள் எடுத்திருந்தார் .

இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக ப்ரப் சிம்ரன் மற்றும் பாரிஸ்டோ களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ப்ரப் சிம்ரன் 6 ரன்னில் வெளியேற அடுத்த சில நிமிடங்களில் பாரிஸ்டோவும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரோஸோவ் அதிரடியாக ஆடி அரைசதம் கடக்க அவரும் 67 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.மறுமுனையில் ஆடிய ஷஷாங் சிங் முட்டிவரை போராடி வந்த நிலையில் அவரும் 37 ரன்களில் வெளியேற பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது.

ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தொடரில் இருந்தே வெளியேற்றியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள்..!!

More in Featured

To Top