Connect with us

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை காப்பாற்றிய மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!

Featured

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை காப்பாற்றிய மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவிக்கு பிரதமர் மோடி நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தற்போது தொழிலாளர்கள் அனைவரும் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடியும் அவரது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

“மீட்புக்குழுவினருக்கு நான் தலை வணங்குகிறேன்”

உத்தரகாசியில் நமது தொழிலாளர்களை மீட்கும் பணி வெற்றிடைந்துள்ளது அனைவரையும் உணர்ச்சிவசமாக்கியுள்ளது.

சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும், எல்லோருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது; மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது மிகவும் திருப்திகரமான விஷயம் . இந்த சவாலான நேரத்தில் தொழிலாளர்கள் குடும்பங்களின் தைரியமும், அவர்கள் காட்டிய பொறுமையும் பாராட்டுக்குரியது.

இந்த மீட்பு பணியில் அயாராது உழைத்த அனைத்து மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Featured

To Top