Connect with us

மும்பையின் ரன்குவிப்பை முடக்குமா லக்னோ – டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

Featured

மும்பையின் ரன்குவிப்பை முடக்குமா லக்னோ – டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் அனல் பறக்க நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு விறுவிறுப்பாக நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 48 ஆவது போட்டியில் LSG – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் லக்னோவில் உள்ள பிரபலக கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்களின் பிரிவு குறித்து வரும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல - மீண்டும் ஒரு வேதனைப் பதிவை போட்ட ஜி.வி.பிரகாஷ்..!!

More in Featured

To Top