Connect with us

“MS தோனி தொடர்ந்த வழக்கில் IPL அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!”

Sports

“MS தோனி தொடர்ந்த வழக்கில் IPL அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!”

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய IPL அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியால், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், நிகழ்ச்சி நடத்திய தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், IPL அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சம்பத்குமார் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சம்பத்குமாரின் கருத்துகள் நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித் துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாக உள்ளது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், IPL அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Sports

To Top