Connect with us

சென்னையில் தொடங்கியது அடுத்த மாபெரும் செஸ் போட்டி – பதக்கம் வெல்வார்களா இந்திய வீரர்கள்..?

Featured

சென்னையில் தொடங்கியது அடுத்த மாபெரும் செஸ் போட்டி – பதக்கம் வெல்வார்களா இந்திய வீரர்கள்..?

சென்னையில் டிச.15 இன்று முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக தொடங்கியுள்ளது

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரில் கடந்த ஆண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட்போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது . இந்த போட்டியில் தமிழக வீரர்கள் பலரும் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர் .

பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த போட்டியை உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாபெரும் செஸ் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னையில் டிச.15 இன்று முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக ஆரம்பம் ஆகி உள்ளது.

உலகநாட்டில் உள்ள திறமை வாழ்ந்த பல வீரர்கள் பங்கேற்கப்போகும் இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர் .

சென்னை லீலா பேலஸில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த மாபெரும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இம்மாதம் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் . இப்போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக 50 லட்சம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 21ம் தேதி வரை வெறித்தனமாக நடைபெற இருக்கும் இந்த போட்டியின் இறுதியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top