Connect with us

இந்தியா – நியூஸிலாந்து இன்று(15.11.23)பலப்பரீட்சை..மிக பெரிய ஆட்டமாக இருக்கப்போகிறது!

CWC23

இந்தியா – நியூஸிலாந்து இன்று(15.11.23)பலப்பரீட்சை..மிக பெரிய ஆட்டமாக இருக்கப்போகிறது!

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் – இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியுடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது…இந்த ஆட்டத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது..

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து அரை இறுதியில் நுழைந்துள்ளது…தோல்வியே இல்லாமல் கிடைத்த வெற்றி இதுவாகும் என்றும் சொல்லலாம்…

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரின் மிகவும் துணிச்சலான ஆட்டத்தின் காரணமாக நல்ல இடத்திற்கு சென்று இருக்கின்றது…இவர்களின் ஆட்டத்தால் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் ரேட் குறித்து அச்சம் இல்லாமல் விளையாடுவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

அதனை போல பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், மொகமது ஷமி ஆகியோர் வலுவாக உள்ளனர்…

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த நிலையில் அதன் பின்னர் அடுத்தடுத்து 4 தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளானது. எனினும் கடைசி லீக்ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி கடைசிஅணியாக அரை இறுதி சுற்றில் கால்பதித்தது…அதனால் நல்ல வலுவான ஆட்டமாக தான் இன்று இருக்கும் என தெரிகிறது..பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன்’ சான்றிதழ் தாமதம்: சீமான் சொன்னது என்ன?

More in CWC23

To Top